போன் எண் வெளியானதால் சிக்கலில் ஷில்பா: “பழகிப் பார்க்க” ஆளாளுக்கு அழைப்பு!!

Read Time:4 Minute, 18 Second

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு புது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவரது மொபைல் போன் எண்ணை இ மெயில் மூலம் ஒரு ரசிகர் வெளிப்படுத்தி விட்டார். இதனால், தினமும் நுõற்றுக்கணக்கானவர்கள் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பி தொந்தரவு செய்து வருகின்றனர். அந்த ரசிகர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டிலும், தமிழ் திரைப்படத் துறையிலும் ஓரளவுக்கு பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. பிரிட்டன் “டிவி’யில் “பிக் பிரதர்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, ஷில்பாவின் புகழ் அதிகரித்து விட்டது. குறிப்பாக பிரிட்டனில் அவர் புகழின் உச்சியில் இருக்கிறார். எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கியர், ஷில்பாவை வளைத்து பிடித்து முத்தமிட்டது உட்பட அவ்வப்போது பல சர்ச்சைகளிலும் ஷில்பா சிக்கி வருகிறார். அந்த வகையில், இப்போது புதிய பிரச்னை ஒன்று ஏற்பட்டுள்ளது. நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் தொந்தரவு அதிகம். எனவே தங்களது மொபைல் போன் எண்ணை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பர். அந்த எண்ணையும் மிகவும் ரகசியமாக பாதுகாத்து வருவர். ஷில்பாவும் அது போல பாதுகாப்பாக வைத்து இருந்த மொபைல் போன் எண்ணை ரசிகர் ஒருவர் எப்படியோ கண்டுபிடித்து விட்டார். அத்துடன் இல்லாமல், அந்த எண்ணை இமெயில் மூலம் ஏராளமானவர்களுக்கும் அனுப்பி விட்டார். அது முதல், ஷில்பா ஷெட்டியின் மொபைல் போனுக்கு ஏகப்பட்ட அழைப்புகள். எனவே வேறுவழியின்றி ஷில்பா ஷெட்டி அந்த ரசிகர் மீது போலீசில் புகார் செய்து விட்டார்.

இது குறித்து, ஷில்பாவின் உதவியாளர் தலே பாக்வார் கூறுகையில், “நடிகை ஷில்பா தற்போது “மிஸ் பாலிவுட்’ என்ற இசை நிகழ்ச்சிக்காக பிரிட்டனில் தங்கியுள்ளார். அவரது மொபைல் போன் எண்ணை வெளிப்படுத்தி விட்டதால், மிகவும் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளார். நுற்றுக்கணக்கானவர்கள் அவருக்கு போன் செய்கின்றனர். சரமாரியாக எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றனர்.

சிலர் ஷில்பாவுடன் “பழகி பார்க்க வேண்டும்” என்கின்றனர். சிலர் அவரது குரலை கேட்க வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர், “பிரிட்டனில் நடக்கும் இசை நிகழ்ச்சி சிறப்பாக உள்ளதா?’ என தேவையில்லாமல் நலம் விசாரிக்கின்றனர். வேறு சிலரோ, உண்மையில், அது ஷில்பாவின் மொபைல் போன் எண் தானா என்பதை உறுதிப்படுத்தி கொள்வதாக கூறுகின்றனர். இது போன்ற தொந்தரவால் ஷில் பா மிகவும் வேதனை அடைந்துள்ளார். அந்த மொபைல் போன் எண்ணை பயன்படுத்துவதை விட்டு விட்டார். இது குறித்து போலீசில் புகார் செய்யப் பட்டுள்ளது. மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்’ என்றார்.

போலீஸ் அதிகாரி சுஷில் ஜோஷி கூறுகையில்,” ஒருவரது தனிப்பட்ட போன் எண்ணை இணைய தளத்தில் வெளியிட்டு சட்டவிரோதமாக செயல்படுபவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை கிடைக்கும்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பைசா கோபுரத்திற்கும் கூடுதல் சாய்வான ஜெர்மனி கோபுரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிறது
Next post வட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்