பைசா கோபுரத்திற்கும் கூடுதல் சாய்வான ஜெர்மனி கோபுரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிறது

Read Time:1 Minute, 4 Second

இத்தாலி நாட்டின் பைசா சாய்ந்த கோபுரமானது – உலக அதிசயங்களில் ஒன்று என்ற தனது அந்தஸ்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. ஜெர்மனியிலுள்ள சூர் ஹுசென் என்ற கிராமத்திலிருக்கும் 15ஆம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றுக்கே இந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கின்னஸ் சாதனை நூல் தெரிவிக்கிறது. இந்த ஜெர்மனி தேவாலயத்தின் 25 மீட்டர் உயரமான கோபுரம் 5 பாகைக்கு மேல் சாய்ந்திருப்பதாகவும், இத்தாலிய பைசா சாய்ந்த கோபுரம் 4 பாகைக்கும் குறைவாகவே சாய்ந்து நிற்பதாகவும் கின்னஸ் புத்தகம் சார்பாக பேசவல்லவர் ஒருவர் குறிப்பிட்டார். சூர் ஹுசென் தேவாலயத்திற்கான சான்றிதழ் இவ்வாரம் வழங்கபடுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரதமர் மன்மோகன்சிங் ரஷியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் 11-ந்தேதி புறப்படுகிறார்
Next post போன் எண் வெளியானதால் சிக்கலில் ஷில்பா: “பழகிப் பார்க்க” ஆளாளுக்கு அழைப்பு!!