68 வயதில் டி.வி. பெண் நிருபரை திருமணம் செய்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்!!

Read Time:1 Minute, 59 Second

f726c49d-abdb-4037-8374-db8f54d00c7f_S_secvpfகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவருமான திக்விஜய் சிங்(68) தனது நீண்ட நாள் தோழியான அம்ரிதா ராய்(44) என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அம்ரிதா ராய், நானும் திக்விஜய் சிங்கும் இந்து சம்பிரதாய முறைகளின்படி திருமணம் செய்துகொண்டோம். எனது சிக்கலான தருணங்களில் எனக்கு பெருந்துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கும் அவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் தொடர்பாக நீண்ட காலமாக கேள்விகள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. இனியும் எழலாம். எனது வயதுக்கு ஏற்ற ஞானத்தின்படி நன்றாக சிந்தித்தே, எனக்கு நல்லது என்று உணர்ந்த பின்னரே இந்த திருமணத்துக்கு நான் சம்மதித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக அம்ரிதாவுடனான உறவு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்த திக்விஜய் சிங், ஏற்கனவே அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி அம்ரிதா வழக்கு தொடர்ந்துள்ளார். அவருடன் நான் வைத்திருக்கும் தொடர்பு பற்றி மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறியிருந்தது, நினைவிருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலக்காடு அருகே விபத்தில் பலியான கர்ப்பிணி பெண்: வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்பு!!
Next post தகாத செய்கைகளால் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது!!