ஒரு விருப்பு வாக்குக்காக சம்பிக்க, கம்மன்பில செலவிட்டது எவ்வளவு தெரியுமா?
கடந்த பொதுத் தேர்தலில் ஒரு விருப்பு வாக்கைப் பெற சம்பிக்க ரணவக்க 1400 ரூபாவை செலவிட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தான் ஒரு விருப்பு வாக்குக்காக 63 ரூபாவை மட்டுமே செலவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.
அதேபோல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், விரைவில் அது குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்டுள்ளதாகவும், அதன் பலனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறும் அரசாங்கத்திடம் கம்மன்பில கோரிக்கைவிடுத்துள்ளார்.