ஜொலிக்கும் தங்கத்தில் ஆடை அணிந்து பேஷன் ஷோவில் கலக்கிய மாடல் அழகி
தங்கத்தில் உடையை வடிவமைத்து, ஜப்பான் ஆடையலங்காரக் கல்லூரி மாணவர்கள், ஆடையலங்கார அணிவகுப்பில் அசத்திவிட்டனர். ஜப்பான், டோக்கியோவில் பங்கா பேஷன் கல்லூரி உள்ளது. இங்கு, ஆடையலங்கார அணிவகுப்பு நடந்தது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆடையலங்கார நிபுணர்கள் வடிவமைத்த உடைகளை அணிந்து மாடல் பெண்கள் குலுக்கு நடை போட்டனர். அரைகுறை ஆடையில் வந்து பலர் அசத்தினர். அணிவகுப்பில் உச்சக்கட்டமாக பங்கா பேஷன் கல்லூரி வடிவமைத்த ஆடையை அணிந்து வந்த மாடல் அழகியைப் பார்த்து அனைவரும் அசந்தனர். அவர் அணிந்திருந்தது தங்கத்தாலான ஆடை. மாணவி அணிந்திருந்தது 10 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட நீண்ட ஆங்கி போன்ற உடை. அதற்கு மேல் 21 கிலோ தங்கத்தினாலான ஜாக்கெட். ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று இந்த ஆடை தயாரிப்புக்கான செலவை கடனாகக் கொடுத்தது.
கல்லூரி வளாகத்தில் மிகவும் பாதுகாப்பாக ரகசிய அறையில் இந்த உடை உருவாக்கப்பட்டது. தங்க உடையில் அணிவகுத்த மாடல் அழகி கூறியதாவது: இதை அணிந்து கொண்டால் தலுக்கிக் குலுக்கி நடக்க முடியாது. அணிந்த போது மிகவும் பளுவாக இருந்தது. பிட்டிங்குகள் மிகவும் நன்றாக இருந்தது. உடையை அணிந்த சுமை இன்னும் இருக்கிறது. சாதாரண நாட்களில் இதை அணியமுடியாது. சாதாரணமாக எங்கும் அணிந்து செல்லவும் முடியாது. இவ்வாறு அழகி கூறினார்.