சரண குணவர்த்தன பிணையில் விடுதலை!!
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் டிக்கிரி கே.ஜயதிலக முன்னிலையில் அவர் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது தலா 50,000 சரீரப் பிணை இரண்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒவ்வொரு ஞாயிறன்றும் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் காலை வேளையில் ஆஜராகுமாறு சரண குணவர்த்தனவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஜனவரி 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை இவ்விடயம் சமாதான சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஐதேக ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சரண குணவர்த்தன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.