அமைச்சரவை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!!
அரசாங்கத்தின் அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடும்படி கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி அருண லக்சிறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
19வது திருத்தச் சட்டத்தின்படி அமைச்சரவை 30ஆக இருக்க வேண்டும் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை 30ற்கும் மேலாக அதிகரித்துள்ளதென மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது சட்டவிரோதமானதெனவும் அரசியல் யாப்பை மீறியுள்ளதாகவும் அறிவிக்கும்படி மனுதாரர் தெரிவித்துள்ளார்.