பேரணி நடத்த முயற்சி: பெனாசிர் கைது- வீட்டுக்காவலில் சிறை வைப்பு

Read Time:2 Minute, 54 Second

பாகிஸ்தானில் அதிபர் முஷரப் கடந்த 3-ந்தேதி நெருக்கடி நிலையை அறிவித் தார். 4000-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தொண்டர் களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். நெருக்கடி நிலையை கண்டித்தும், முஷரப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வக்கீல் கள் போராட்டம் நடத்தினார் கள். இப்போது மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ள னர். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் பெனாசிரும் முஷரப் புக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளார். நெருக்கடி நிலையை ரத்து செய்து விட்டு ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்த வேண் டும் என்று முஷரப்புக்கு 15-ந்தேதி வரை பெனாசிர் கெடு விதித்தார். 13-ந்தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் முதலில் அறிவித்து இருந் தார். ஆனால் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த முஷரப் அரசு தடை விதித்துள்ளது.இந்த தடையை மீறி இன்று ராவல் பிண்டியில் பெனாசிர் போராட்டம் நடத்த சென்றார். இதனால் பெனாசிர் கைது செய் யப்பட்டார். அவர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். ஏற்க னவே முன் எச்சரிக்கை நடவ டிக்கையாக அவரது ஆதரவா ளர்கள் 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை ரத்து செய்து விட்டு ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தும்படி முஷரப் புக்கு அமெரிக்க அதிபர் புஷ்சும் நெருக்கடி கொடுத் தார்.

பாகிஸ்தானுக்கு நிதி உதவி களை நிறுத்தும் நடவடிக்கை களையும் அமெரிக்கா மேற் கொண்டது. சிக்கல் அதி கரித்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதிக் குள் தேர்தல் நடைபெறும் என்று முஷரப் அறிவித்துள்ளார்.

ஆனால் இது பற்றி பெனாசிர் கூறும்போது, முஷரப்பின் வாக்குறுதியை நம்ப முடியாது. அவர் நெருக்கடி நிலையை உடனடியாக ரத்து செய்து தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் மீது லண்டனில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்!!
Next post தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல்; வைகோ, நெடுமாறன், திருமாவளவன் தலைமையில் மவுன ஊர்வலம்; காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!!