தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!!

Read Time:4 Minute, 7 Second

63e02690-c1b8-46b0-9cc4-bb315d3c7362_S_secvpfஇந்தியாவில் தற்போது 98 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. 30 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன.

பல இடங்களில் வை–பை வசதிகளை ஏற்படுத்தி அதில் மூலம் இணையதள இணைப்புகளை பார்த்து வருகின்றனர். ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வை–பை வசதி செய்யபட்டு உள்ளது. இதுபோல அலுவலகங்கள், வீடுகளில் வை–பை வசதிகள் தாராளமாக வந்துவிட்டன.

ஆனால் வை–பை வசதியை பயன்படுத்தினால் உடல்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

அதாவது வை–பை சேவையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்தால் அலர்ஜி தாக்கும். இதன் மூலம் தலைவலி, சோர்வு போன்றவை ஏற்படும்.

ஏற்கனவே செல்போன் சிக்னல்கள் பல்வேறு உடல் நிலை பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கண்டறிந்தனர். அதே போல மின் காந்த அலை மூலம் செயல்படும் ‘வை–பை’யும் அதே போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

தற்போது பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வை–பை வசதியை ஏற்படுத்தி செல்போன், லேப்டாப், டேப்லட் போன்றவற்றில் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். வை–பை வெளியிடும் மின்காந்த அலைகள் அந்த அறை முழுவதும் பரவியிருக்கும். அதனால் உடலில் செயல்பாடுகளை பாதிக்க செய்ய பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பெரியவர்களை விட குழந்தைகளை தான் வை–பை மின்காந்த அலைகள் அதிகமாக பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். குழந்தைகளின் மூளை மற்றும் உள்உறுப்புகள் வளர்ந்தபடி இருக்கும். அத்துடன் இந்த உறுப்புகள் முழு வலுவடையாமலும் இருக்கும். இதனால் மின் காந்த அலைகள் குழந்தைகளை அதிகம் பாதிப்பதாக கூறுகின்றனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைவதோடு, புரிதல் தன்மையும் குறைந்து விடும் என்று லக்னோ அம்பேத்கார் பல்கலைக்கழக பயோடெக்னாலஜி துறை பேராசிரியர் எம்.ஒய்.கான் கூறுகிறார்.

மேலும் அவர் கூறும் போது, இந்தியாவில் மிக மலிவான செல்போன்களை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். செல்போனில் குறிப்பிட்ட அளவுக்கு தான் மின்காந்த சக்திகள் இருக்க வேண்டும் என்று சர்வதேச விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் மலிவான செல்போன்களில் இந்த விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. அதிக சக்தி கொண்ட மின்காந்தத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறினார்.

கம்ப்யூட்டர் விஞ்ஞான துறை பேராசிரியர் நீராஜ் குமார் திவாரி கூறும் போது, ‘‘ரேடியோ அலை கொண்ட எந்த ஒரு மின்காந்த பொருளை அதிகமாக பயன்படுத்தினாலும் உடல்நிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும், தலைவலி, எரிச்சல், கேட்கும் திறன்பாதிப்பு, தூக்கமின்மை, உடல் சோர்வு, நிம்மதியிழப்பு, மனநிலை குழப்பம், தலைசுற்று போன்றவை ஏற்படும்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லி சவுதி தூதரக அதிகாரி செய்த கொடுமை: நேபாள பெண்களை தினமும் 20 பேர் வரை கற்பழித்தனர்!!
Next post வேலியே பயிரை மேய்ந்தது: கோவிலில் சிலைகளை திருடிய பூசாரி உள்பட 6 பேர் கைது!!