சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை!!
குருக்கள்பட்டியை சேர்ந்தவர் பிச்சையாபாண்டியன் (வயது60). இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு இவருக்கு காலில் ஆப்பரேசன் செய்யப்பட்டது.
இந்நிலையில் வீட்டில் இருந்து சலூன் கடைக்கு சென்றவர் முடி வெட்டி விட்டு வரும் போது கீழே தவறி விழுந்ததில் மீண்டும் ஆப்ரேசன் செய்த அதே இடத்தில் அடிபட்டதில் காயமடைந்துள்ளார். இதனால் மிகுந்த வேதனை அடைந்த பிச்சையாபாண்டியன் வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டாராம். அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் பற்றி சின்னகோவிலான்குளம் சப்–இன்ஸ்பெக்டர் அந்தோணிசவரிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.