பொதுமக்களால் சித்தர் பாட்டி என்று அழைக்கப்பட்ட 95 வயது மூதாட்டியை உயிருடன் சமாதி கட்ட முயற்சி!!

Read Time:4 Minute, 51 Second

97fff077-38eb-43bc-96c4-7855082fbdf5_S_secvpfசித்தர் பாட்டி’ என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் உமாதேவி. 95 வயதினை கடந்து விட்டதாக சொல்லப்படும் உமாதேவியின் பூர்வீகம், குடும்பம் பற்றி எதுவும் தெரியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவில் அருகே வந்தார். பின்னர் அப்பகுதியில் பக்தர்களை கையால் அடித்தும், திட்டியும் அருள்வாக்கு கூறிவந்தார். அவர் திட்டினாலே நமக்கு நல்லது நடக்கும் என பக்தர்கள் நம்பினர்.

இதனை கேள்விப்பட்டதும் கர்நாடகம், கேரளம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து சித்தர் பாட்டியை பார்க்க பக்தர்கள் குவிந்தனர். இவ்வாறு 4 ஆண்டுகள் நாமக்கல் மோகனூரில் இருந்த சித்தர் பாட்டி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தை சேர்ந்த அவரது பக்தரான டாக்டர் நடராஜன் என்பவர் அவரை அழைத்து வந்து தனது தோட்டத்தில் தங்க வைத்தார். வயது முதிர்வின் காரணமாக உமாதேவியால் எழுந்து நடக்க இயவில்லை.

இந்த நிலையில் சித்தர் பாட்டியை உயிருடன் சமாதி கட்ட சிலர் முயற்சிப்பதாக கலெக்டர் ஜெயந்திக்கு புகார் வந்தது. அவர் தங்கி இருந்த அறைக்கு அருகில் சமாதிக்கு குழிவெட்டி இருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் உதவி கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் உடல்நலம் குன்றி காணப்பட்ட சித்தர் பாட்டியை மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக சித்தர் பாட்டியால் நீராகாரம் தவிர எதுவும் சாப்பிட முடிய வில்லை. இதற்கிடையே சித்தர்பாட்டியை பராமரித்து வந்த டாக்டர் நடராஜன் தரப்பினர் சித்தர் பாட்டியை பொய் புகார் கொடுத்த கும்பல் கடத்தி செல்ல திட்ட மிட்டுள்ளதாக கூறினார்.

இதை தொடர்ந்து கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சித்தர்பாட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கலெக்டர் ஜெயந்தி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று மாலை சித்தர் பாட்டியை நேரில் பார்வையிட்டனர். இதற்கிடையே சித்தர் பாட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் தகவல் அறிந்த பக்தர்கள் ஆஸ்பத்திரிக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

அவர்கள் சித்தர் பாட்டியின் காலை தொட்டு வணங்கி செல்கின்றனர். பலரும் அவரின் அற்புதங்களை கூறுகிறார்கள். சோமூரை சேர்ந்த வசந்தா என்ற பெண் பக்தை கூறும்போது, சித்தர்பாட்டி தெய்வாம்சம் பெற்றவர் என்பதில் சந்தேகமில்லை. நான் ஒருமுறை செல்லும் போது, நான் யார்? என்ன தொழில் செய்கிறேன் என்பதை சொல்லி அதிரவைத்து விட்டார் என்றார்.

இன்னொரு ஆண் பக்தர் கூறும்போது, வீடு கட்ட முடியாமல் தடுமாறிறேன். அவரை சந்தித்த பின்னர் எல்லாம் நல்லபடியாக நடந்தது என நெகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 2 நாளில் ஆஸ்பத்திரி ஊழியர்களும் சித்தர் பாட்டியின் பக்தர்களாக மாறிவிட்டனர். பக்தர்கள் சிலர் கூறும்போது, சித்தர் பாட்டியை அவரது விருப்பப்படி நடத்தவேண்டும். கட்டாயப்படுத்தி தனிநபர் அழைத்து செல்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என வலி யுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மந்திரி உத்தரவு படி மனைவியை கடித்த நாயை எப்படி கைது செய்வது?: வக்கீல் கேள்வி!!
Next post காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் மாணவியை கொல்ல முயன்றேன்: வாலிபர் வாக்குமூலம்!!