சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்!!
கொட்டதெனியாவ பிரதேசத்தில் 5 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கான பல தடயங்கள் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு கிடைத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், இந்த விசாரணைகள் பொலிஸ் மா அதிபரினால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.