By 11 November 2007

பாரீசில் தீ விபத்தில் இந்திய பெண்கள் 3 பேர் பலி

france.gifபிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுமி ஒருத்தி உள்பட 3 இந்திய பெண்கள் உடல் கருகி செத்தனர். பலியானவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண் ஆவார். தீயணைப்பு படை வீரர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். தீயணைக்கும் படையினர் 150 பேர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த குடியிருப்பின் தரை தளத்தில் ஒரு ஓட்டல் உள்ளது. அங்கு இருந்து தீ பிடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் தீயில் பலியானவர்கள் 3-வது தளத்தில் வசித்தவர்கள் ஆவார்கள்.



Comments are closed.