500 ஈராக் கைதிகளை அமெரிக்க ராணுவம் விடுதலை செய்தது

Read Time:1 Minute, 8 Second

ஈராக்கில் விமான நிலையம் உள்ள ராணுவ தளத்தில் விக்டரி முகாமில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 500 கைதிகளை அமெரிக்க ராணுவம் விடுதலை செய்தது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் நீண்ட காலமாக சிறைவைக்கப்பட்டு இருக்கும் கைதிகளை விடுதலை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஈராக் துணை ஜனாதிபதி தாரிக் அல் ஹஷ்மிக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஈராக்கில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் மட்டும் 20 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர் விசாரணையின்றி பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலில் நாகதேவி இறங்கிவிட்டதாக உயிருடன் இளம்பெண் சமாதி
Next post விளாத்திகுளத்தில் மோதல் தம்பனையில் மோதல், மன்னார் முன்னரங்கில் மோதல்