தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல்; வைகோ, நெடுமாறன், திருமாவளவன் தலைமையில் மவுன ஊர்வலம்; காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!!

Read Time:2 Minute, 18 Second

விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமழ்ச்செல்வன், ராணுவத்தின் குண்டு வீச்சில்(?) பலியானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் மவுன ஊர்வலம் சென்னையில் 12-ந்தேதி நடைபெறுகிறது. தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுசார்பில் நடைபெறும் இந்த ஊர்வலம் 12-ந்தேதி மாலை 4 மணிக்கு சென்னை மன்றோ சிலையில் இருந்து புறப்படுகிறது. சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே முடிவடைகிறது. ஊர்வலத்துக்கு தமிழக விடுதலை ஆதரவாளர் குழு ஒருங்கிணைப்பாளர் பா.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் திருமா வளவன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இந்திய தேசியலீக் தலை வர் பசீர் அகமது, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி உள்பட பலர் இந்த இரங்கல் ஊர்வலத்தில் பங்கேற்கிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் பிரிவு பொறுப் பாளர் தமிழச் செல்வன், மற்றும் 5 தளபதிகள் இலங்கை அரசு விமானம் மூலம் குண்டு வீசி படுகொலை செய்தது. இதை கண்டிக்கும் வகையில் இந்த ஊர்வலம் தமிழீழ வீடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுசார்பில் நடத்தப்படுகிறது என்று பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார். தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டங்களுக்கு போலீஸ் அனுமதி வழங்க கூடாது என்று தமிழ் நாடு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கப் பட்டதாக இது வரை அறிவிக்கப்படவில்லை. எனவே அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பேரணி நடத்த முயற்சி: பெனாசிர் கைது- வீட்டுக்காவலில் சிறை வைப்பு
Next post டிவிகளின் போட்டா போட்டி தீபாவளி