விடுதலைப்புலிகளை தாக்க அமெரிக்க ஆயுதங்கள்

Read Time:2 Minute, 7 Second

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சண்டை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. விடுதலைப்புலிகள் பல்வேறு நாடுகளில் இருந்து உதிரிபாகங்களை கடத்தி வந்து அவற்றை ஒன்றிணைத்து குட்டி விமானங்களை தயாரித்து வருகிறார்கள். இந்த உதிரி பாகங்கள் மற்றும் ஆயுதங்கள் கடல் வழியாக கடத்தி வருவதை தடுக்கவும் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தவும் நவீன ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கி குவிக்கிறது. இலங்கை கடற்படைக்கு அமெரிக்காவும் உதவி செய்து வருகிறது. விடுதலைப்புலிகளின் படகுகள் வெகு தூரத்தில் வருவதை கண்காணிக்க நவீன ராடார் மற்றும் இதர கருவிகளை அமெரிக்கா இலவசமாக வழங்கி இருக்கிறது. அதி நவீன குட்டி விசைப் படகுகள், ரப்பர் படகுகள் ஆகியவற்றையும் வழங்கி உள்ளது. திரிகோண மலையில் நடந்த விழாவில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் ஓ பிளேக் இவற்றை கடற்படை தளபதி வசந்த கரன்ன கோடா விடம் வழங்கினார்.
இலங்கை பாராளுமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்றது யார் என்பது மர்மமாக உள் ளது.
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் இலங்கை ராணுவத்தினரால் குண்டுவீசி கொல்லப்பட்டபோது 5 விடுதலைப்புலிகள் பலியானார்கள். இதில் காயம் அடைந்தவர் களில் செல்லத்தம்பி என்ற இன்னொரு விடுதலைப்புலி தளபதி நேற்று உயிர் இழந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கேர்ள் பிரண்டை கொன்று ‘தின்ற’ நபர்!
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…