இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு!!

Read Time:2 Minute, 0 Second

107654911Untitled-1மனித உரிமைகளைக் காப்பதில் இலங்கை அரசு வலுவான நோக்கத்தை கொண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இணை அமைச்சர் நிஷா தேயாய் பிஸ்வால் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

குடிமக்களின் நலன்களையும் காப்பதிலும், மனித உரிமைகளைக் காப்பதிலும் இலங்கை அரசு உறுதியாக உள்ளது.

இலங்கையில் புதிய அரசு அமைந்தபின், கடந்த 9 மாதங்களில் நாட்டை அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாகக் கொண்டு செல்வதற்கு தேவைப்படும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, கடந்த 9 ஆண்டுகளில் சாதிக்கப்பட்டவைகளை விடவும் அதிகமாகும்.

இது, வரவேற்கப்பட வேண்டிய விஷயமாகும். எனினும், கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போரின்போது அரசுத் தரப்புக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்புக்கும் நிகழ்ந்த இழப்புக்களை சரிக்கட்ட, இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மக்களும் கடந்து செல்ல வேண்டிய பாதை நெடுந்தொலைவில் உள்ளது.

எனினும், நாட்டில் அமைதியையும், குடிமக்களின் நலன்களையும் உறுதிப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார் நிஷா தேயாய் பிஸ்வால்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டில் உணவு விஷமானதால் 20 பேர் வைத்தியசாலையில்!!
Next post இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பது குறித்துக் கவலை!!