நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம்!!

Read Time:1 Minute, 48 Second

326258694Untitled-1நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் ஒன்று முறையாக நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் முடிவடைந்து, சுமார் பத்தாண்டுகள் ஆகும் நிலையில், புதிய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனம் நடைமுறைக்கு வருவதை குறிக்கும் வகையில் நாட்டின் ஜனாதிபதி ராம் பரன் யாதவ் அதில் கையெழுத்திட்டார். தலைநகர் காட்மாண்டுவில் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி புதிய சாசனத்தில் கையெழுத்திட்டபோது கரகோஷம் எழுப்பி தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

முன்னதாக, நாட்டின் தென் பகுதியில் இனச் சிறுபான்மையினரைச் சேர்ந்த போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் வன்முறையுடன் கூடிய மோதல்கள் இடம்பெற்றன. புதிய அரசியல் சாசனம் தங்களைப் பாரபட்சமாக நடத்தும் என அவர்கள் அச்சம் வெளியிட்டனர்.

நாட்டில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்ந்து வந்தாலும், புதிய அரசியல் சாசனம் நேபாளம் மதச்சாற்பற்ற நாடாக இருக்கும் என்று கூறுகிறது.

இன்று புதிதாக ஏற்கப்பட்டுள்ள அரசியல் சாசனத்தின் அடிப்படையில் கூட்டாட்சியை அடிப்படையாக் கொண்டு நேபாளம் ஏழு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை விவகாரம் – நாளை தமிழகத்தில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்!!
Next post அதிபர்!!