சுயாதீன ஆணைக்குழு அமைக்கும் நடவடிக்கை இவ்வாரம் ஆரம்பம்!!
19வது திருத்தச் சட்டத்தின்படி சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கும் செயற்பாடுகள் இவ்வாரம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 10 சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ள சிவில் பிரதிநிதிகள் மூவரின் பெயர்கள் நாளை கூடவுள்ள பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
கலாநிதி ஏ.ரி.ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் முன்னாள் நீதிபதி சிப்லி அஷிஸ் ஆகியோர் சிவில் பிரதிநிதிகளாக முன்மொழியப்பட்டுள்ளனர்.
இவர்களது பெயர்களுக்கு பாராளுமன்றில் நாளை அனுமதி கிடைத்தபின் 10 பேர் அடங்கிய அரசியலமைப்பு பேரவை நாளை கூறவுள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
அதன்பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.