மாமியாரை பலாத்காரமாக மனைவியாக்கிய மருமகன் கைது!!
73 வயதுடைய தனது மாமியாரை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 57 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
லுனுவில – ரஜவத்த பகுதியில் கடந்த 16ம் திகதி இரவு 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரஜவத்த பகுதி வீட்டில் தனியாக வசித்து வந்த தனது மாமியாரை மருமகன் பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும் சந்தேகநபர் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் வைத்திய பரிசோதனைக்கென சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.