விளாத்திகுளத்தில் மோதல் தம்பனையில் மோதல், மன்னார் முன்னரங்கில் மோதல்
வவுனியா விளாத்திகுளம் மற்றும் உமையரட்டுவன்குளம் பகுதிகளில் புலிகளின் இலக்குகள்மீது நேற்றுமுழுவதும் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு ஊடகமையம் அறிவித்துள்ளது. இதேவேளை வவுனியா தம்பனையிலும் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று பாரிய மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது படைவீரர் ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்ததாகவும், இம்மோதலில் புலிகளுக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. மன்னார் முன்னரங்க நிலைகள்மீது புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று படையினர் காயமடைந்துள்ளதாகவும், படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது.