விஜேவீரவின் மனைவிக்கு மேலும் ஆறு மாதங்கள் அனுமதி!!

Read Time:1 Minute, 55 Second

938749229Untitled-1மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மேலும் ஆறுமாத காலம் வெலிசற கடற்படை முகாம் வீட்டில் தங்கியிருக்க அனுமதி அளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்படை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு கவுன்சிலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் இந்திக்க டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, விஜேவீரவின் குடும்பத்தை கடற்படை பாதுகாப்பில் இருந்து விடுவிக்க தீர்மானித்ததாகவும் அது தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், ஊடகங்கள் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் உள்ளிட்ட காரணங்களை ஆராய்ந்து மேலும் ஆறு மாதங்கள் அவர்கள் அங்கு தங்கியிருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் தமக்கு மேலும் குறித்த வீடுகளை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என விஜயவீரவின் மனைவியே அல்லது உறவினர்களே கோரவில்லை எனவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையக மக்கள் பிரச்சினை பற்றி ஐ.நா சபையில் உரையாற்றும் திலகர் எம்பி!!
Next post ஐ.நா அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமானது – வடக்கு முதல்வர்!!