நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு!!
கடுவலை நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சந்தேகநபரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.