இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை – காரணம்…?
நொச்சியாகம – வில்பத்து இராணுவ முகாமிலுள்ள சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 21ம் திகதி அதிகாலை இவர் இராணுவ முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் இன்று காலை குறித்த இராணுவ முகாமுக்கு சுமார் 700 மீற்றர் தொலைவில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இவர் பதவிய பகுதியைச் சேர்ந்த கோப்ரல் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.