மகிந்தபுர “டக்ளஸ்புர” வாக இருக்க வேண்டுமாம்!! – ஐனாதிபதி மகிந்த

Read Time:2 Minute, 9 Second

dakkilas-makinththa.gifயாழ் குடாநாட்டில் ஏற்பாடாகியிருக்கும் (சிங்கள) குடியேற்றத்திற்கான பெயர் சூட்டும் வைபவம் நேற்றைய அமைச்சரவை அமர்வில் இடம்பெற்றது. அவ்வீடமைப்பு திட்டத்திற்கான பெயரை முன்மொழிந்த ஈபிடிபி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவ்வீடமைப்பு திட்டததை மகிந்தபுரம் என அழைப்பதையிட்டு தான் மனமகிழ்ச்சி அடைவதாக கூறினார். டக்ளஸை புன்னகைப்புடன் நோக்கிய ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ பொதுவுடைமைகள் எவற்றிற்கும் தன்னுடைய பெயரிடுவதை தான் விரும்பவில்லை என்றும் இத்திட்டத்திற்கு டக்ளஸ்புர அல்லது தேவானந்தபுர என பெயரிட்டாலும் பொருத்தமாக இருக்குமென தெரிவித்தார். ஐனாதிபதியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ஐயராஐ; பெர்னான்டோ புள்ளை இவ்வீடமைப்பு திட்டத்திற்கு ஒர் தமிழரது பெயரை சூட்டுவதானால் அங்கு தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்ட சேர்.பொன்னம்பலம் இராமநாதன் போன்றோரின் பெயரே சிறந்ததாகும் என வாதிடத் தொடங்கியதையடுத்து மகிந்தபுர என்பதே சிறந்த பெயராகும் என வாதிட்ட அமைச்சர் டக்ளஸ் சபையில் பெரும் பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டார். ஆயினும் மேற்படித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு வீ.ஆனந்தசங்கரி அவர்கள் அண்மையில் கண்டன அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post கண்ணீர் ஆற்றில் கிழக்கு மக்கள் மூழ்கித் தவிக்கையில் முதலமைச்சர் எனும் எலும்புத் துண்டொண்றுக்காக சிங்கள மாய சதிவலையில் சிக்கி தவிக்கும் கிழக்கின் மைந்தர்கள். (அதிரடி இணையத்தில் வெளிவந்த ஆக்கம் இது)