தீப்பிடித்து தந்தை, மகள் காயம்
திருவொற்றியூரில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர். திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவைச் சேர்ந்தவர் சர்குணம் (வயது 52). இவர் வசித்து வரும் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் வீடு எரிந்ததோடு அருகில் உள்ள ஐந்து மோட்டார் சைக்கிளும் எரிந்து சாம்பலாயின. மேலும் சர்குணம் மற்றும் அவரது மகள் மணிமேகலை ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தீ விபத்து குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.