தனுஷ் படம் பார்த்த சிரஞ்சீவி

Read Time:2 Minute, 2 Second

chiranjeevi.jpgதனுஷ் நடித்த “பொல்லாதவன்’ திரைப்படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சென்னையில் உள்ள பிரிவியூ திரையரங்கு ஒன்றில் நேற்றிரவு பார்த்தார். தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “பொல்லாதவன்’. இப்படத்தை நேற்றிரவு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேவி ஸ்ரீ தேவி பிரிவியூ திரையரங்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பார்த்தார். இப்படத்தை அவரது மகன் ராம்சரண் தேஜாவிற்கு ரீமேக் செய்ய சிரஞ்சீவி திட்டமிட்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. சமீபத்தில் தான் ராம்சரண் தேஜா நடித்த “சிறுத்தா’ என்ற படம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் குணசேகர் இயக்கத்திலோ, தமிழ் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்திலோ ராம்சரண் தேஜா நடிப்பார் என பேசப்பட்டது. இந்நிலையில், “பொல்லாதவன்’ படம் தனது மகனுக்கு பொருத்தமாக இருக்குமா? என்று பார்ப்பதற்காக சிரஞ்சீவி இப்படத்தை பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், நேற்று சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, தனது காதல் கணவர் பரத்துடன் புதுடெல்லியில் இருந்து ஐதராபாத் திரும்பினார். அச்சமயத்தில் ஐதாராபத்தில் இருக்க வேண்டாம் என்று கருதியதால் தான் சிரஞ்சீவி சென்னை வந்திருப்பதாகவும் ஒரு சிலர் பேசி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தீப்பிடித்து தந்தை, மகள் காயம்
Next post பஸ் மோதி கணவன்மனைவி பலி