நான் அரசியல்வாதியும் இல்லை, காட்சி சார்ந்தவனும் இல்லை!!
என்னை பலரும் எதிர்ப்பு அரசியல்வாதியென வர்ணிப்பதை நான் அறிவேன். நான் அரசியல்வாதியும் இல்லை, காட்சி சார்ந்தவனும் இல்லை என, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று மாலை யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நீதித்துறையில் சில காலம் கழித்த பின்னர், ஆன்மீகத்துடனும், இலக்கியத்துடனும், சட்டத்துடனும், முழ்கியிருந்த என்னை வழுக் கட்டாயமாக இழுத்துவந்து தேர்தலில் போட்டியிட வைத்தார்கள்.
அமோக வெற்றி பெற்றேன், பின்னர் எனது நிலை மாறியது. எவ்வாறான எதிர்ப்பு, பழிச்சொல், நேர்ந்தாலும் நான் கவலைப்படபோவதில்லை. ஒரு கட்சியில் ஒருவர், இருவர் எடுக்கும் முடிவுக்கு எல்லாம், எல்லோரும் கட்டுபடவேண்டும் என நினைக்கின்றனர்.
அவர்களின் குறைநிறைகளை கூறும்போது, என்னை எதிர்ப்பு அரசியல்வாதியென கூறுகின்றார்கள். ஆகையால் இதனைப் பற்றி நன்றாக சிந்தியுங்கள் எது நல்லதோ அதனை வழுப்பேற செய்யுங்கள்.
வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் எமது வடமாகாண சபையின் ஊடாக வரும் போது முன்னை அரசாங்கத்தினால் பல தடைகள் விதிக்கப்பட்டன. இப்போது ஒரு இணக்கமான சூழல் காணப்படுகின்றது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.