உள்ளக விசாரணை மீது நம்பிக்கை இல்லாதவர்களை குறை கூற முடியாது!!

Read Time:1 Minute, 58 Second

2125914456Untitled-1ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா அமர்வில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான யோசனையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உள்ளடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகள், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள் போன்றவர்களின் ஈடுபாடு, நீதியான விசாரணையில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த கால அனுபவங்கள் சிறப்பாக இல்லை என்பதால், உள்நாட்டு நீதி விசாரணை மீது நம்பிக்கை இல்லாதவர்களை குறை கூற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் இது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்படும் சிறந்த தீர்மானமாக அமையும், எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்படும் சூழலில் இந்த தீர்மானத்தை நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது எனவும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழிவுத் தொட்டியில் சிசுவை வீசியது யார்?
Next post உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பில் சீர்திருத்தம்!!