இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு

Read Time:1 Minute, 42 Second

ani_indiaflag1.giffrancef2.gifஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் நாடாக இந்தியாவை அங்கீரிக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தம் மற்றும் விரிவாக்கம் குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரான்ஸ் சார்பில் கலந்து கொண்டு பேசிய அதன் பிரதிநிதி ஜீன் பியரிக் லக்கோரிக்ஸ், இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நான்கு நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் ஐ.நா. சபையின் உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஆப்பிரிக்க நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தின் போது பாகிஸ்தான் வழக்கம் போலவே நிரந்தர உறுப்பினர்கள் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா கடந்த பல ஆண்டுகளாக நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்திற்காக ஆதரவு திரட்டி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆனந்துக்கு டாக்டர் பட்டம்
Next post இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்