திருப்பதியில் சுப்ரபாத டிக்கெட் வாங்கி கொடுப்பதாகக் கூறி பக்தர்களிடம் பண மோசடி: இடைத்தரகர்கள் 3 பேர் கைது…!!

Read Time:3 Minute, 34 Second

9af993eb-2fa3-479a-8cec-cdaebd57b550_S_secvpfதிருமலையில் ஆர்ஜித சேவை மற்றும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் கொடுக்கும் இடத்துக்கு அருகில் நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் உள்பட 10 பேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த திருமலை–திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தனர்.

அப்போது பெங்களூருவை சேர்ந்த 6 பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வந்துள்ளனர். அவர்களிடம், திருப்பதியை சேர்ந்த இடைத்தரகர்களான ஜனார்த்தனன், கிருஷ்ணன், பிந்து ஆகியோர் தங்களுக்கு சிபாரிசு கடிதங்கள் மூலம் சுப்ரபாத தரிசனத்தில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடு செய்கிறோம், அதற்காக எங்களுக்கு 11 ஆயிரத்து 500 ரூபாய் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு சம்மதித்த பெங்களூரு பக்தர்கள், எங்களுக்கு 6 சுப்ரபாத தரிசன டிக்கெட்டுகள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். மேற்கண்ட ரொக்கப்பணத்தை பெற்றுக்கொண்ட இடைத்தரகர்கள் வி.ஐ.பி.தரிசன டிக்கெட்டுகளை வாங்கி வந்து பெங்களூரு பக்தர்களிடம் கொடுத்து ஏமாற்ற முயன்றனர்.

அந்த வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளை ஏற்காத பெங்களூரு பக்தர்கள் கடும் கோபமடைந்தனர். நாங்கள் சுப்ரபாத தரிசன டிக்கெட்டுகளை மட்டும்தான் கேட்டோம். வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளை கேட்கவில்லை, நீங்களும் சொன்னதை சரியாக செய்யாமல், பணத்தை வாங்கி கொண்டு எங்களை ஏமாற்றி விட்டீர்களே என்று கூறி இடைத்தரகர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் ஆந்திர மாநில மந்திரி ஒருவரின் சிபாரிசு கடிதத்தையும், திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரின் சிபாரிசு கடிதத்தையும் பயன்படுத்தி பெங்களூரு பக்தர்களுக்கு, இடைத்தரகர்கள் வி.ஐ.பி.தரிசன டிக்கெட்டுகளை வாங்கி கொடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து பெங்களூரு பக்தர்கள் 6 பேரும் மற்றும் இடைத்தரகர்கள் 3 பேரையும் பிடித்து தேவஸ்தான பறக்கும்படை அதிகாரிகள், திருமலை–2 டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இடைத்தரகர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தரிசன டிக்கெட் வாங்கி கொடுப்பதில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்…!!
Next post மாடியில் இருந்து விழுந்து தலை சிதறிய வாலிபருக்கு செயற்கை மண்டை ஓடு: ஐதராபாத் டாக்டர்கள் சாதனை…!!