கொலைக்குற்றவாளிக்கு மரண தண்டனை..!!

Read Time:4 Minute, 56 Second

images (2)2000ஆம் ஆண்டில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் புத்­தளம் மாவட்­டத்தில் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்ட இரு அபேட்­ச­கர்­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட விருப்பு வாக்கு பிரச்­சி­னையின் போது வென்­னப்­புவ கிரி­மெட்­டி­யான சந்­தியில் வைத்து இருவர் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்டு கொலை செய்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ருக்கு சிலாபம் மேல் நீதி­மன்றம் மரண தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

வென்­னப்­புவ கிரி­மெட்­டி­யான பிர­தேசத்தைச் சேர்ந்த 51 வய­து­டைய ஒரு­வ­ருக்கே இவ்­வாறு சிலாபம் மேல் நீதி­மன்ற நீதி­பதி அமல் ரவீந்­திர ரண­ரா­ஜா மரண தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்தார். கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாத தினம் ஒன்றில் வென்­னப்­புவ கிரி­மெ­ட்­டி­யான சந்­தியில் வைத்து மில்டன் நிசாந்த (வயது 30) மற்றும் சனத் பிரி­யந்த (வயது 27) ஆகிய இரு­வரைக் கொலை செய்த சம்­பவம் தொடர்பில் இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள நபர் 2000ஆம் ஆண்டு இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் புத்­தளம் மாவட்­டத்தில் பொது ஜன ஐக்­கிய முன்­ன­ணியில் போட்­டி­யிட்ட அபேட்­சகர் ஒரு­வ­ருக்கு ஆத­ர­வாகச் செயற்­பட்­டுள்­ளமை நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்ட சாட்­சி­யங்­களின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த இரு­வரும் அதே கட்­சியில் புத்­தளம் மாவட்­டத்தில் போட்­டி­யிட்ட மற்­றொரு வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வாகச் செயற்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் அந்த தேர்­தலில் தான் ஆத­ர­வ­ளிக்கும் அபேட்­ச­க­ருக்கு ஆத­ரவு வழங்கும் வகையில் கிரி­மெட்­டி­யான சந்­தியில் பிர­சார காரி­யா­லயம் ஒன்று நடத்திச் செல்­லப்­பட்­டுள்­ளது. இந்த காரி­யா­ல­யத்தில் கொலை செய்­யப்­பட்ட இரு­வரும் மேலும் சில­ருடன் சம்பம் இடம்­பெற்ற தினத்தில் இருந்த போது அந்த காரி­யா­ல­யத்­திற்குச் சற்று தொலைவில் ஜீப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளது.

இதனை அவ­தா­னித்த குறித்த காரி­யா­ல­யத்தில் இருந்த கொலை செய்­யப்­பட்ட இருவர் உட்­பட ஏனையோர் அவ்­வி­டத்­திற்குச் சென்­றுள்­ளனர். பின்னர் அவர்கள் அச்­சந்­தியில் நின்­றி­ருந்த போது மாலை 6.30 மணி­ய­ளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் முகத்தை மறைத்துக் கொண்டு அவ்­வி­டத்­திற்கு மற்­றொ­ரு­வ­ருடன் வந்­துள்ள குற்றம் சுமத்­தப்­பட்ட நபர் இவர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­டு­விட்டு அவ்­வி­டத்­தி­லி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளனர்.

துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி இரத்த வெள்­ளத்தில் கிடந்த இரு­வரும் உட­ன­டி­யாக தங்­கொட்­டுவ வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்ட போதும் அங்கு மில்டன் நிசாந்த என்­பவர் உயி­ரி­ழந்­துள்ளார். மற்­றையவர் ஆபத்­தான நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்றப்பட்ட பின்னர் அங்கு உயி­ரி­ழந்­துள்ளார். இச்­சம்­ப­வத்தின் பின்னர் ஒரு வருட காலம் தலைமறைவாகியிருந்த குற்றம் சுமத்தப்பட்ட வர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.சாட்சியங்களின் பிரகாரம் கொலைக் குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் தொடரும் வாழைக்குலை திருட்டு! செய்கையாளர்கள் திண்டாட்டம்…!!
Next post மகாத்மா காந்தியின் ஜனன தினம் இன்று..!!