உலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் கொச்சியில் உள்ளது: மோடி பெருமிதம்..!!

Read Time:2 Minute, 52 Second

timthumbஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தியில், சூரிய சக்தியால் இயங்கும் மாவட்ட நீதிமன்றத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மோடி, “மாவட்ட நீதிமன்றத்தின் திறப்பு விழாவிற்கு பிரதமர் ஏன் வர வேண்டும் என்று பலரும் ஆச்சர்யம் அடைகின்றனர், குழப்பமடைகின்றனர். நான் தற்போது, ஐ.நா.வில் இருந்து வருகிறேன். ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் உலகம் வெப்பமயமாதல் குறித்தும், பருவநிலை மாறுபாடு குறித்தும் அதிக அளவில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், சூரிய மின்சக்தி மின்னுற்பத்தியை ஊக்குவிப்பது முக்கியமான தேவையாக உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “நிலக்கரி சுரங்கம் இல்லாத குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை விட ஜார்க்கண்ட் மாநிலம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது” என்றார்.

“இயற்கை வளங்களை சுரண்டுவதை நமது கலாச்சாரம் அனுமதிக்காது. பணத்தையும் மின்சாரத்தையும் சேமிக்க எல்.இ.டி பல்புகளை பயன்படுத்த வேண்டும். ஃபரிதாபாத் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் சேவையும் சூரிய சக்தியின் மூலம் இயங்குகிறது” என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் இன்று மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ள பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் இது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன் ராம் மாஞ்சி, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் மற்றும் பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெலுங்கானாவில் ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 15 வயது மாணவன் தற்கொலை..!!
Next post சந்திரனுக்கு குறுங்கோள்களே தண்ணீர் சப்ளை செய்கிறது: புதிய ஆய்வில் தகவல்…!!