சிறுவர் பாதுகாப்புக்கு விசேட கருவி அறிமுகப்படுத்தப்படவுள்ளது…!!

Read Time:1 Minute, 36 Second

images (1)சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட கருவி ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, தொலைதொடர்புகள் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த கருவியின் மூலம் சிறுவர்கள் இருக்கும் இடத்தை பெற்றோர் அறிந்துக் கொள்ளவும், பெற்றோருக்கும், காவற்துறையினருக்கும் சிறுவர்கள் அவசர அழைப்பை ஏற்படுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

அண்மைக்காலமாக இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையிலையே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

ஜீ.பி.எஸ். தொழில்நுட்பத்தின் ஊடாக செயற்படும் இந்த கருவியை தொலைபேசியாக பயன்படுத்த முடியாது.

ஆனால் இதனை வைத்திருக்கும் சிறுவர் தமது பெற்றோருக்கோ, அல்லது காவற்துறையினருக்கோ அவசர தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த முடியும்.

அத்துடன் இதன் ஊடாக சிறுவர் இருக்கும் பிரதேசத்தையும் அடையாளம் காண முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யானைத் தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் பலி…!!
Next post சேலத்தில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் சிறுமி பலி..!!