ஆப்கானிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 11 பேர் பலி…!!

Read Time:1 Minute, 26 Second

b7f11330-f384-413e-8180-ccb6d8dafde6_S_secvpfஆப்கானிஸ்தானில் ராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்காவைச் சேர்ந்த 6 வீரர்கள் உள்பட 11 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்களுக்கு நேட்டோ தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சித் திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்ததாரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-130 என்ற ராணுவ போக்குவரத்து விமானம் இன்று அதிகாலை கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலலாபாத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்திற்குள்ளானது.

இதில், ஒப்பந்ததாரர்கள் 5 பேர், அமெரிக்க ராணுவ வீரர்கள் 6 பேர் என மொத்தம் 11 பேர் பலியானதாக அமெரிக்க ராணுவ கர்னர் பிரையன் டிரைபஸ் கூறினார்.

சி-130 விமானம், 4 டர்போ என்ஜின்கள் கொண்ட மிகப்பெரிய விமானமாகும். படை வீரர்களையும் கனரக வாகனங்களையும் போர்முனைக்கு எடுத்துச் செல்வதற்கு இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் கொடூரம்: வட்டமாக சப்பாத்தி சுடாத மகளை அடித்து கொன்ற தந்தை..!!
Next post கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிய காவலாளியிடம் ரூ.4 ஆயிரம் திருட்டு…!!