வீடு முழுக்க விஜய் படம்!-சிபிராஜ் மீது சத்யராஜ் பாய்ச்சல்!

Read Time:1 Minute, 40 Second

sathyaraj04.jpgமைக்கை பிடித்தால் துக்க வீட்டை கூட, கலகலப்பாக்கி விடுவார் சத்யராஜ். ஒவ்வொரு முறை மேடையேறும்போதும் பேசிய விஷயத்தையே பேசி கழுத்தறுக்காமல் புதுசு புதுசாக பேசி, ஆடியன்சை மகிழ வைப்பதில் அவருக்கு நிகர் அவரே! விஜய் கலந்து கொண்ட விழா ஒன்றில் மைக் பிடித்த சத்யராஜ், ‘விஜய் மேல எனக்கு ரொம்ப கோவங்க’ என்று ஆரம்பித்தார் கொங்கு தமிழில். எஸ் பாஸ்’னு டயலாக் சொல்ல ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து நிறைய சம்பளம் வாங்கி ஒரு அழகான வீட்டை கட்டி வச்சிருக்கேன். அதிலே யாரு படத்தைங்க மாட்டணும்? எங்கே திரும்பினாலும் விஜய் படத்தையே மாட்டி வச்சிருக்கான் என் பையன் சிபி. அப்படி ஒரு வெறிபிடிச்ச விஜய் ரசிகனா இருக்கான். என் படத்தை நாலே நாலு மாட்டி வச்சு, விஜய் படத்தை பத்து மாட்டினாலும் பரவாயில்லை. எல்லா படமும் அவருதான்னா எனக்கு எப்படியிருக்கும்? கொஞ்சம் அவனை பார்க்கும் போது சொல்லி வைங்க’ என்று சத்யராஜ் பேச, பேச முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிபியை பார்த்து சிரித்துக் கொண்டேயிருந்தார் விஜய்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 20 ஆயிரம் வக்கீல்கள் கைது
Next post புலிகளுடன் தொடர்பு: 4 பேர் கைது