புதிய படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் ஸ்ரீதிவ்யா…!!

Read Time:2 Minute, 0 Second

Sri-Divya-500x500‘வருத்தப்படாத வாலிபர்சங்கம்’, ஜீவா படங்களில் பள்ளிக்கூட மாணவியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இப்போது அதர்வா ஜோடியாக ஈட்டி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.

புதிய படங்களில் கவர்ச்சியாகவும் நடிக்கிறார். இது பற்றி ஸ்ரீதிவ்யாவிடம் கேட்ட போது….

‘சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ‘காக்கிசட்டை’ படமும் நன்றாக ஓடியது. இப்போது, அதர்வாவுடன் ‘ஈட்டி’ படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். வாழ்க்கையில் எனக்கு கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தபடத்தில் கல்லூரி மாணவியாக நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.

தற்போது ஈட்டி தவிர அர்ஜூன், கார்த்தி ஆகியோருடனும் வேறு இரண்டு படங்களிலும் நடித்து வருகிறேன்.

புதிய படங்களில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப கவர்ச்சியாக நடிக்கிறேன். இன்றைய இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப நடிக்க வேண்டும். அதற்காகவே இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். இப்போது நடித்து வரும் படங்களில் எனக்கு நல்ல பாத்திரங்கள் கிடைத்துள்ளன. இதில் நடிப்பதன் மூலம் எனது நடிப்பு திறமை மேலும் வெளிப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிரடி படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அந்த வாய்ப்பும் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெனிவா தீர்மானம் – தமிழர் தரப்பின் குழப்பம்…!!
Next post பொலிஸ் தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவன்: சுட்டு வீழ்த்திய பொலிசார் (வீடியோ இணைப்பு)