புலிகள் விமானம் ஊடுருவல்

Read Time:5 Minute, 20 Second

jet-f15-2.gifஇலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அநுராதபுரத்தில் மீண்டும் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகளின் போர் விமானங்கள் நேற்று அதிகாலை ஊடுருவின. உடனே மின் சாரம் துண்டிக்கப்பட்டு, ராணுவத் தினர் விமான எதிர்ப்பு பீரங்கியால் சுட்டு, புலிகளின் போர் விமானங் களை விரட்டி அடித்தனர். இதற்கிடையே, இலங்கையின் வாழ் வாதாரமாக திகழும் கொழும்பு துறை முகத்தின் மீது விடுதலைப் புலிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்று கிடைத்த தகவ லின் அடிப்படையில் அங்கு பாது காப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் விடுதலைப்புலி களின் கட்டுப்பாட்டில் உள்ள வட கிழக்கு மாகாணத்தை கைப்பற்று வதற்கு சிங்களப்படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. கடந்த மாதம் விடுதலைப்புலிகளின் போர் விமானம் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அநுராதபுரத்தில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில், அரசு படைகள் நடத் திய தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட சிலர் பலியானார்கள்.

இதற்கு பழிக்குப்பழி வாங்கும் வகை யில் விடுதலைப்புலிகளின் 2 போர் விமானங்கள் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வவுனியாவைத் தாண்டி அநுராதபுரம் வான்வெளிக்குள் ஊடுருவின.

அவற்றை பார்த்த பொதுமக்கள் தெரிவித்த செய்தியின் அடிப்படை யில் அநுராதபுரத்திலும், தலைநகர் கொழும்பிலும் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. அநுராதபுரம் பகுதிக்குள் பிரவேசித்த விடுதலைப்புலிகளின் போர் விமா னங்களை நோக்கி சிங்களப்படை யினர் சுமார் 20 நிமிட நேரத்திற்கு விமான எதிர்ப்பு பீரங்கியால் சுட்டனர்.

அதிகாலை வேளையில் எழுந்த இந்த சத்தத்தால் பொதுமக்கள் பீதி அடைந் தனர். விடுதலைப்புலிகள் மீண்டும் வான்வழித்தாக்குதல் நடத்துகிறார் களா? என்ற அச்சம் அவர்களிடையே ஏற்பட்டது.

ஆனால், இது வழக்கமாக நடை பெறும் ஒத்திகை என்று சிங்களப்படை தரப்பில் சொல்லப்பட்டது. அரை மணி நேரம் கழித்து மீண்டும் மின்சார விநி யோகம் நடைபெற்றது. இதனிடையே, இலங்கையின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள கொழும்பு துறைமுகத்தின் மீது விடுத லைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் போலீஸ் சீருடையில் காவல்துறை வாகனத்தில் துறை முகத் திற்குள் நுழைய முயற்சிக்கக் கூடும் என்று தகவல் கிடைத்திருப்பதாக பாது காப்புத்துறை செய்தித் தொடர் பாளர் உதயா நாணயக்காரா தெரிவித்தார்.

இதையடுத்து, காவல்துறை, ராணு வம் உள்ளிட்ட அனைத்து வாகனங் களும் இலங்கை கடற்படையின் அனுமதி பெற்ற பின்னரே துறைமுகத் திற்குள் நுழைய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பு பொறுப்பை இலங்கைக் கடற்படை மேற்கொண்டுள்ளதாகவும், கடற் படையின் அனுமதியின்றி எந்தவொரு வாகனமும் துறைமுகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாது என்றும் மூத்த கடற்படை அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

இதற்கிடையே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், எண்ணெய்க் கிடங்குகள், மின் நிலையங்கள், அணைகள் உள்ளிட்ட முக்கிய இடங் களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

கொழும்பு நகர போலீஸ் டி.ஐ.ஜி. நிமல்மெடிவாக்காவுடன் மேற்குப் பகுதி கடற்படைத் தளபதி பஜ்பெரீஸ் நேற்று முன்தினம் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நயன்தாரா இப்போ நல்ல டெக்னீஷியன்
Next post பேருந்தில் ஏற முயன்ற பெண் தவறி கீழே விழுந்தபோது சாவு