நாடே முக்கியம்: முஷாரப்

Read Time:1 Minute, 10 Second

musharraf.jpgஜனநாயகத்தை விட நாட்டை காப்பதே முக்கியம் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையும், எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவதையும் நியாயப்படுத்தும் வகையில் முஷாரப் இவ்வாறு கூறியுள்ளார். பாகிஸ்தானில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்நாட்டில் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கூறியுள்ளார். இந்த நிலையில், முஷாரப் ஜனநாயகத்தை காப்பதைவிட பாகிஸ்தானை பாதுகாப்பது முக்கிய குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பேருந்தில் ஏற முயன்ற பெண் தவறி கீழே விழுந்தபோது சாவு
Next post ஜெர்மன் துணை அதிபர் விலகல்