ஒரு கை விரல்களில் மிக நீளமான நகங்களை வளர்த்து இந்தியர் கின்னஸ் சாதனை…!!
இந்தியாவை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால் (78). இவர் தனது இடது கையில் உள்ள 5 விரல்களிலும் நீளமான நகங்கள் வளர்த்துள்ளார்.
இதன் மூலம் மிக நீளமான கை நகங்கள் வளர்த்தவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் தனது 4 விரல்களில் 909.6 செ.மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளர்த்துள்ளார்.
அதே நேரத்தில் கட்டை விரலில் மட்டும் 2 மீட்டர் நீளத்தில் நகம் வளர்த்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:–
கடந்த 1952–ம் ஆண்டில் இருந்து நகங்களை வெட்டாமல் வளர்த்து வருகிறேன். இதனால் இளம் வயதில் பல கஷ்டங்களையும், இடையூறுகளையும் அனுபவித்து இருக்கிறேன். நான் நீளமான நகம் வளர்ப்பதற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் அதில் இருந்து நான் பின்வாங்கவில்லை.
இந்த நீளமான நகங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்க முடிவு செய்து இருக்கிறேன். எதிர் காலத்தில் நகங்களை வெட்ட மாட்டேன். அவற்றை தொடர்ந்து வளர்ப்பதே எனது வாழ்க்கையின் லட்சியம் என்றார்.
Average Rating