காதலியை கேடயமாக வைத்து ரூ.5கோடி கேட்டு தொழில் அதிபர் மகன் காரில் கடத்தல்: 6 பேர் கைது…!!

Read Time:8 Minute, 8 Second

71779814-6bea-4db9-bf2d-4ee9465c446c_S_secvpfசென்னை போயஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரவி சுந்தரம். மூலிகை மற்றும் அழகு சாதன பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவரது மகன் அபிஷேக் (19) என்ஜினீயரிங் மாணவரான இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற அபிஷேக் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இரவு முழுவதும் அபிஷேக்கை அவரது பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று காலையில் அபிஷேக்கின் தாயார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அபிஷேக்கின் செல்போனில் இருந்து பேசிய மர்ம நபர் ‘‘உங்களது மகனை நாங்கள் தான் கடத்தி வைத்துள்ளோம். 5 கோடி ரூபாய் கொடுத்தால் அவனை விட்டு விடுகிறோம். போலீசுக்கு சென்றால் அபிஷேக்கை உயிருடன் பார்க்க முடியாது’’ என்று மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி கணவருக்கு தெரியப்படுத்தினார். ரவி சுந்தரம் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் அபிஷேக்கை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ரகசியமாக ஈடுபட்டனர். நேற்று பகல் முழுவதும் கடத்தல் கும்பலிடம் ரவி சுந்தரத்தை செல்போனில் பேசிக்கொண்டே இருக்கும் படி போலீசார் தெரிவித்தனர்.

அவரும் கடத்தல்காரர்களுடன் தொடர்ந்து போனில் பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருந்தார்.

துணை கமிஷனர்கள் சரவணன், கண்ணன் ஆகியோர் தலைமையில் உதவிக் கமிஷனர் சிவபாஸ்கர் மற்றும் 7 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் கடத்தல் கும்பலிடம் இருந்து அபிஷேக்கை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சென்னை மாநகரம் முழுவதும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

அப்போது தேனாம்போட்டை பகுதியில் காரில் பதுங்கி இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வேறொரு காரில் அபிஷேக்குடன் மேலும் 3 கடத்தல்காரர்கள் சென்னை விமான நிலையம் அருகே காத்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விமான நிலையத்தை சுற்றி இருக்கும் பகுதியை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விமான நிலையம் அருகில் அபிஷேக்குடன் காரில் இருந்த மேலும் 3 பேர் கொண்ட கடத்தல் கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.

போலீசை பார்த்ததும் கடத்தல்காரர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் காரில் தப்பிச்சென்றனர். போலீசாரும் சினிமா பாணியில் அவர்களை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். பல்லாரம் ரேடியல் சாலையில் சென்ற போது கடத்தல் கும்பல் சென்ற கார் நிலை தடுமாறி சாலையோரமாக கவிழ்ந்தது.

இதையடுத்து கடத்தல் கும்பலை துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்தனர். இதனால் வேறுவழியின்றி கடத்தல் கும்பல் சரண் அடைந்தது. காருக்குள் இருந்த அபிஷேக்கை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

நேற்று காலையில் தொடங்கிய போலீஸ் வேட்டை இன்று அதிகாலை 3.30 மணியளவில்தான் முடிவடைந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும், மீட்கப்பட்ட அபிஷேக்கையும் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கடத்தலின் பின்னணியில் காதல் விவகாரம் இருந்ததும், காதலியை கேடயமாக வைத்தே கடத்தல் கும்பல் அபிஷேக்கை கடத்திய திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.

இது பற்றிய பரபரப்பான தகவல் வருமாறு:–

அபிஷேக் கடந்த சில மாதங்களாக இளம்பெண் ஒருவருடன் பழகியுள்ளார். அந்த பெண்ணுடன் செல்போனில் பலமுறை பேசி இருக்கிறார். தொடர்ந்து எஸ்.எம்.எஸ்.களும் அனுப்பியுள்ளார். நேற்று முன்தினம் இரவில் அந்த பெண்தான் போன் செய்து அபிஷேக்கை அழைத்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்து புறப்பட்ட அபிஷேக் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு செல்வதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். கோட்டூர்புரம் பாலம் அருகில் வைத்து காதலியை சந்திக்க சென்ற போது தான் அங்கு 2 கார்களில் தயாராக இருந்த கடத்தல் கும்பல் அபிஷேக்கை கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கடத்தல் கும்பல் அந்த பெண்ணை மையமாக வைத்தே அபிஷேக்கின் தாயாரிடம் போனில் பேசியுள்ளனர். அப்போது தங்கள் மகன் ஒரு பெண்ணுடன் பழகி அவரை ஏமாற்றி இருக்கிறார். எனவே 5 கோடி ரூபாய் தந்தால் இதை வெளியில் சொல்ல மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர்.

இது பற்றி அபிஷேக்கிடம் கேட்ட போது அந்த பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்றும் போனில் மட்டுமே தொடர்ந்து பேசி வந்ததாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தலுக்கு ரவி சுந்தரத்தின் நிறுவனத்தில் பணியாற்றிய மதன் என்ற முன்னாள் ஊழியரும் உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கேம்பளாபாத்தை சேர்ந்த ரிஸ்வரன் (26), சதாம் உசேன் (24), அகமது பகாத் (27) உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல் கும்பலுக்கும், அபிஷேக்குடன் பழகிய பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் நள்ளிரவில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவர்களை குற்றவாளிகள் போன்று நடத்தும் பொறியியல் கல்லூரி: குமுறும் மாணவர்கள் (வீடியோ இணைப்பு)…!!
Next post மதுரையில் இன்று தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…!!