உடலுறவின் போது வேறு பெண்ணின் பெயரை முணுமுணுத்த கணவர்: கொலை வெறியோடு கத்தியால் குத்திய மனைவி…!!
அமெரிக்காவில் உடலுறவின் போது வேறு பெண்ணின் பெயரை முணுமுணுத்த கணவரை கத்தியால் குத்திய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பாம் கடற்கரையை சேர்ந்தவர் கிரிஸ்டியானா பலாஜி.
தனது கணவர் பலாஜியுடன் உடலுறவில் கிரிஸ்டியானா ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அப்போது அவரது கணவர் வேறு பெண்ணின் பெயரை முணுமுணுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிரிஸ்டியானா, சமையலறையில் இருந்த கத்தியால் தனது கணவரின் கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் குத்தியுள்ளார்.
இதில் அவரது கணவர் பலத்த காயமடைந்துள்ளார். எனினும் கிரிஸ்டியானாவிடம் இருந்து தப்பித்து வெளியே சாலைக்கு வந்து உதவி கேட்டுள்ளார்.
இதனிடையே அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற கிரிஸ்டியானாவை வெஸ்ட் பாம் கடற்கரை பொலிசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக பொலிசார் கூறியதாவது, விசாரணையின் போது குற்றம் செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்
அவர் பைபோலார் டிஸ்ஸாடர் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
Average Rating