வகுப்பிற்கு வெடிகுண்டு கொண்டு வந்த மாணவன்: அதிர்ச்சியில் உறைந்த பள்ளி நிர்வாகம்…!!

Read Time:2 Minute, 30 Second

Digital StillCamera
Digital StillCamera
பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் மாணவன் வகுப்பிற்கு வெடிகுண்டு கொண்டு வந்ததால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகம் உடனடியாக மாணவர்களை வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸில் Saint-Louise என்ற கத்தோலிக்க பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நேற்று ஆசிரியர்கள் சிறப்பு புரோஜெக்ட் ஒன்றை அளித்துள்ளனர்.

இதில் பங்குப்பெற்ற மாணவர்கள் விதவிதமான வரைப்படங்கள், பொம்மைகள் உள்ளிட்ட பலவற்றை செய்து வந்து ஆசியர்யர்களை பிரமிக்க வைத்துள்ளனர்.

ஆனால், இதே வகுப்பில் பயின்ற மாணவன் முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்றை கொண்டு வந்ததில் சக மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மாணவனின் செயலைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக இரண்டு வகுப்புகளில் இருந்த மாணவர்களை பள்ளியை விட்டு பாதுக்காப்பாக வெளியேற்றியது.

தகவல் அறிந்து வந்த பொலிசார், மாணவனிடம் இருந்த வெடிகுண்டு பொருளை கைப்பற்றினர்.

ஆனால், யாரிடம் இருந்து இந்த வெடிகுண்டுவை கொண்டு வந்தான் என்ற தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இது குறித்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பள்ளி வகுப்பிற்கு மாணவர்கள் பயங்கர ஆயுதங்கள் கொண்டு வருவது இது முதல் முறை இல்லை.

சில மாதங்களுக்கு முன்னர் தந்தை பயன்படுத்திய துப்பாக்கி ஒன்றை மாணவன் பள்ளிக்கு கொண்டு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அஜாக்கிரதையாக இருந்த தந்தைக்கு நீதிமன்றம் 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நபரின் நிலை இது…!!
Next post முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது…!!