போராட்டத்தில் விஷம் குடித்த 9 மாணவ-மாணவிகள்: தீவிர சிகிச்சை…!!

Read Time:2 Minute, 0 Second

adi_dravidar_poison_002விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 9 மாணவ-மாணவிகள் விஷம் குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி கட்டண முழு தொகைகள் உரிய முறையில் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து அந்த கல்லூரி மாணவ–மாணவிகள், நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த விஷ பாட்டில்களை எடுத்து விஷத்தை குடித்துள்ளனர். இதில் 9 பேர் மயங்கி விழுந்தனர்.

பின்னர் பொலிசார் அவர்களை, அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும், அவர்களில் அதிக அளவு விஷம் குடித்திருந்த 6 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் குடித்தது வீரியம் குறைவான எறும்பு மருந்து என்பதால் அதிக பாதிப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுவானில் மாரடைப்பால் மயங்கி விழுந்த விமானி: 147 பயணிகளுக்கு நடந்தது என்ன? (வீடியோ இணைப்பு)…!!
Next post போதைப் பொருளுக்கு அடிமையான தந்தை: குடும்பத்தை சீரழிப்பதாக கூறி கத்தியால் தாக்கிய மகன்…!!