புற்றுநோயை தடுக்கும் காய்கறிகள்..!!

Read Time:4 Minute, 7 Second

11214729-Composition-with-vegetables-and-fruits-in-wicker-basket-isolated-on-white-Stock-Photoபுற்­றுநோய் செல்­களை உடலில் வள­ர­வி­டாமல் தடுக்கும் சக்தி காய்­க­றி­க­ளுக்கு உண்டு. அத்­த­கைய சக்தி வாய்ந்த காய்­க­றிகள் பற்­றிய குறிப்­புகள்:

உரு­ளைக்­கி­ழங்கு: புற்­று­நோயை எதிர்க்கும் பொருள், தோலின் உட்­பா­கத்தில் இருப்­பதால், உரு­ளைக்­கி­ழங்கை தோலுடன் சாப்­பிட வேண்டும். அதிலும், பேபி பொட்­டேட்டோ என்று அழைக்­கப்­படும், உருண்­டை­யான சிறிய ரக உரு­ளைக்­கி­ழங்கு சிறந்­தது.

பாகற்காய்: விஞ்­ஞா­னிகள் பாகற்­காய்­சாறு, மார்­பக புற்­றுநோய் செல்­களை அழிப்­பது மட்­டு­மின்றி, புற்­றுநோய் செல்­களைப் பெருக்­க­ம­டை­யாமல் தடுக்­கி­றது எனக் கண்­டு­பி­டித்­துள்­ளனர். ஆனால், கரு­வுற்ற பெண்­களும், பால் கொடுக்கும் தாய்­மார்­களும் பாகற்காய் உண்­பதை தவிர்க்க வேண்டும்.

வெங்­காயம்: வெங்­கா­யத்­தையும், பூண்­டையும் உணவில் அதிகம் பயன்­ப­டுத்­தினால், வயிற்­றுப்­புற்­றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு தெரி­விக்­கி­றது. தக்­காளி: ஆண்கள் வாரம் பத்­து­முறை, தக்­காளி சாப்­பிட்டால், புராஸ்டேட் புற்­றுநோய் வரும் ஆபத்து 45% குறைவு என்றும், வாரம் 7 முறை சமைக்­காமல் சாப்­பிட்டால், குடல் மற்றும் வயிற்­றுப்­புற்று நோய் வரும் ஆபத்து, 60% குறைவு என்­கின்­றனர் ஆராய்ச்­சி­யா­ளர்கள்.

இதில் உள்ள லைகோ­பீனின் சக்­தி­யா­னது, கொஞ்சம் சமையல் எண்ணெய் விட்டு சமைத்தால் அதி­க­ரிக்­கி­றது. புராஸ்டேட் புற்­றுநோய் செல்­களின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்­கி­றது. செல்­களைக் கொல்­லவும் செய்­கி­றது என்று ஆராய்ச்சி முடி­வுகள் தெரி­விக்­கின்­றன. தக்­காளி நுரை­யீரல், வயிறு, வாய், குடல், மலக்­குடல் புராஸ்டேட் புற்­று­நோய்­களை வராமல் தடுக்­கி­றது.

முட்­டைகோஸ்: கணை­யப்­புற்று, மார்­ப­கப்­புற்று, வயிற்­றுப்­புற்று, குடல்­புற்று வராமல் தடுக்­கி­றது. கீமோ­தெ­ர­பி­யுடன் முட்­டைகோஸ் சாற்றை, புரோ­கோலி மற்றும் காலிஃ­பி­ளவர் சாற்­றுடன் கொடுத்து வந்தால் மார்­பகப் புற்­று­நோயைக் குணப்­ப­டுத்தி விடலாம் என்­கின்­றனர் விஞ்­ஞா­னிகள். முட்­டைக்­கோஸைத் தொடர்ந்து சாப்­பிட்டு வர, கணையப் புற்­றுநோய் வராது என்­கின்­றனர் ஆராய்ச்­சி­யா­ளர்கள். கந்­த­கமும், ஹிஸ்­டிடின் அமினோ அமி­லமும், நோயை தடுப்­ப­தாகச் சொல்­கி­றது மற்­றொரு ஆராய்ச்சி.

சாலட்: வெங்­காயம், காரட், வெள்­ளரி, தக்­காளி சாலட் சிறந்த புற்­றுநோய் எதிர்ப்பு உணவு ஆகும். அத்­துடன் இவ்­வகை உண­வு­களைக் குழந்­தைகள் சிறு­வ­யதில் விரும்பிச் சாப்­பி­டு­வார்கள். காரணம், அவர்­க­ளு­டைய ஜீன்­களில் அவை பதி­வாகி விடு­வதால் அந்த வகை உணவுகளை அவர்கள் விரும்புவார்கள். பரம்பரை புற்றுநோய்கள் என்று சொல்லப்படுகின்ற தைராய்டு புற்று, கணையப் புற்று, குடல் புற்று, சிறுநீர்ப்பை புற்று போன்றவற்றை நிச்சயம் வராமல் தடுக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிப் கிஸ் அடிக்க துடிக்கும் சிறுவன்! (VIDEO)…!!
Next post சூட்கேசில் ஒளிந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்ற மனிதர்: புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த நாய்…!!