ஏழு மணி நேர சாகச பயணம் மேற்கொண்ட பூனை: பத்திரமாக பாதுகாத்து வரும் விமான நிலைய ஊழியர்கள்…!!

Read Time:2 Minute, 14 Second

kitten_survies_002-615x396எகிப்தில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் 7 மணி நேரம் சாகச பயணம் மேற்கொண்ட பூனையை பிரித்தானியா விமான நிலைய அதிகாரிகள் மீட்டு பாதுகாத்து வருகின்றனர்.

எகிப்தின் Cairo விமான நிலையத்தில் இருந்து Emirates விமான நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று Birmingham விமான நிலையித்தில் வந்துள்ளது.

விமானத்தில் இருந்து சரக்குகளை இறக்கும்போது விமான ஊழியர் ஒருவரின் கண்ணில் பட்டுள்ளது பிறந்து ஆறே வாரங்களான அந்த Stowaway ginger kitten.

உடனடியாக அந்த ஊழியர் சம்பந்தபட்ட அதிகாரிகளை இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து சரக்கு பகுதியில் 7 மணி நேரம் சாகச பயணம் மேற்கொண்ட அந்த பழுப்பு நிற பூனைக்குட்டியை மீட்டு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

Cairo என செல்லமாக பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக்குட்டியை அதன் பின்னர் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து விமான நிலைய அதிகாரிகள் சிகிச்சையளித்துள்ளனர்.
இதனிடையே பூனையின் மருத்துவ செலவினங்களுக்காக Emirates விமான நிர்வாகம் 1000 பவுண்டுகள் வழங்கியுள்ளது.

பூனைக்குட்டி பூரண குணமடைந்ததும் வரும் திசம்பர் மாதம் Derby பகுதியில் அமைந்துள்ள Lina’s Cat Rescue sanctuaryக்கு அனுப்ப உள்ளதாக Birmingham விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உரிமையாளர் யாரென இதுவரை தெரியாததால் பூனை ஆர்வலர்கள் எவரேனும் விரும்பினால் அங்கிருந்து உரிய முறைப்படி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கங்களுடன் இந்த பெண் இப்படி செய்வது சரியா? (VIDEO)
Next post செய்யாறு அருகே சுடு தண்ணீர் மீது விழுந்து 4 வயது சிறுமி சாவு..!!