காதலிக்கென பிரத்யேகமாக உருவாக்கிய கேமின்மூலம் திருமணத்துக்கு சம்மதம் கேட்ட இளைஞர் – வீடியோ இணைப்பு

Read Time:1 Minute, 37 Second

d381c679-cbc3-4762-acad-12d73042c94c_S_secvpfபொதுவாக, திருமணம் செய்ய விரும்பும் பெண்ணுக்காக தனித்துவமான மோதிரத்தை ஆசை, ஆசையாக வாங்கிக் காத்திருப்பர் மேலை நாட்டு ஆண்கள். ஆனால், அவர்களையெல்லாம் மிஞ்சும் விதமாக மிக அழகாக தனது காதலியை மனைவியாக்கிக் கொள்ளும் விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார் ஆஸ்டின் பீச் என்கிற காதலன்.

கேம் டிசைன் செய்யும் வேலையிலுள்ள ஆஸ்டின், வீடியோ கேம் விளையாடுவதை விரும்பும் தனது காதலி லோரென் வுட்ரிக்குக்கென பிரத்யேகமாக, ‘மாரியோ’ கேமைப் போன்ற ஒரு கேமை வடிவமைத்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் முதன்முறையாக சந்தித்ததிலிருந்து, இருவருக்குமான அழகான நிகழ்வுகளை, இந்த வீடியோ கேமுக்குள் பொருத்தி, கேமின் முடிவு நிலைக்கு வரும்போது, தனது தாத்தா, பாட்டியிடம் காதலை வெளிப்படுத்தியபோது ஒலிபரப்பான பாடலை ஒலிக்கச் செய்து, தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

ஐந்து லட்சம் பேருக்கும்மேல் கண்டு ரசித்த, இந்த அழகான காதல் வெளிப்பாட்டை வீடியோ வடிவில் கண்டு மகிழுங்கள்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல தடவைகள் முயன்று தற்கொலை செய்து கொண்ட வயோதிபர்…!!
Next post அமெரிக்காவில் விஷஊசி போட்டு கொள்ளையனுக்கு மரண தண்டனை..!!