சர்க்கரையும், ஆல்கஹாலும் இல்லாத வாழ்வு எப்படியிருக்கும்?: வீடியோ இணைப்பு…!!

Read Time:2 Minute, 26 Second

1df57bd2-6618-47d5-8f9c-20bff8e8f4de_S_secvpfஇந்த சமுதாயத்தினர் அதிகமாக குண்டாக இருப்பதற்கான காரணமாக சொல்லப்படும், சர்க்கரையையும், ஆல்கஹாலையும் முற்றும் துறந்தால், எப்படி இருக்கும்? எனத் தெரிந்துகொள்ள விரும்பிய நெதர்லாந்து நாட்டு திரைப்பட இயக்குனர், சச்சா ஹார்லேண்ட் தானே ஒரு மாத காலத்துக்கு, இவையல்லாத வாழ்வை மேற்கொண்டார்!

‘பட்ட காலிலே படும்’ என்பது நம்மூர் பழமொழியாக இருந்தாலும், அதன் சாராம்சம் உலகம் முழுக்க பல நாடுகளிலும் பிரபலமானதுதான். கே.எப்.சி., மெக்டோனால்ட், டோமினோஸ் எனப் பழகிவிட்ட நமக்கு, சர்க்கரை அல்லாத உணவுப் பண்டங்கள் கிடைப்பதே அரிதுதான்.

விரும்பி உட்கொண்ட இதுபோன்ற உணவு வகைகளையும், ஆல்கஹால் பானங்களையும் விட்டுவிட நினைக்கும்போதுதான் அதன் நினைவுகள் நமக்கு வரும். காதலி, நண்பர்கள் என சுற்றியுள்ள அனைவரும் ‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும்’ விதமாக சச்சாவின் கண்முன்னே அவர் உண்பதை நிறுத்த முயற்சிக்கும் பொருட்களையே உட்கொண்டாலும் எப்படியோ ஒரு மாதத்தை இவற்றைப் பற்றிய ஏக்கத்திலேயே கடந்து விட்டார்.

இந்த ஒரு மாத காலத்தைக் கழித்த பின்னர், இதற்கு முந்தைய மற்றும் தற்போதைய உடல் நிலையை அளவிட்டுப் பார்த்தபோது, உடலின் கொழுப்பு குறைந்து, சீரான ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை குறைவு போன்றவை ஏற்பட்டிருந்தது. இவையனைத்துக்கும் மேலாக ஒருவித உற்சாகத்துடன் காணப்பட்டார்.

இனிவரும் நாட்களில் உடலின் தேவைக்கேற்ப நல்ல உணவு வகைகளை எடுத்துக் கொள்ளப்போவதாக சச்சா தெரிவித்துள்ளார்.

அவரது அனுபவத்தைப் பற்றிய வீடியோவை நீங்களும் பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகனை பாடசாலையில் சேர்க்க தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர்…!!
Next post சிங்கங்களுடன் இந்த பெண் இப்படி செய்வது சரியா? (VIDEO)