By 8 October 2015 0 Comments

மதுரையில் குழந்தையை கடத்திய விபசார அழகி கள்ளக்காதலனுடன் கைது…!!

d391aace-6690-4b87-9edb-b6add6eaa76a_S_secvpfமதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி ராமு காம்பவுண்டை சேர்ந்தவர் சந்திரன் (வயது32), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுடைய பக்கத்து வீட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அண்ணன், தங்கை என்று கூறிக்கொண்டு சத்யாவும், ரிக்சாட்சன் ஆகியோர் குடிவந்தனர். இவர்கள் 2 பேரும் சந்திரன், அவரது மனைவியிடம் உறவினர்கள் போல் பழகி வந்தனர்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சரஸ்வதிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆண்குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று ரிக்சாட்சன் குழந்தைக்கு நகை வாங்கி தருவதாகவும், அதற்கு வெளியே செல்லவும் அழைத்துள்ளார்.

இதை நம்பி சந்திரன், அவரது மனைவி, பச்சிளங் குழந்தை மற்றும் சத்யா, ரிக்சாட்சன் ஆகியோர் ஆட்டோவில் மதுரை நகைக்கடை பஜாருக்கு புறப்பட்டனர். அப்போது வேலைநிமித்தமாக சத்யா கீழவாசலில் இறங்கி விட்டார்.

பின்னர் 3 பேரும் ஆட்டோவில் சென்றனர். நகைக்கடை பஜாரில் இறங்கிய ரிக்சாட்சன் ஏ.டி.எம். மில் பணம் எடுத்து வருவதாக கூறியுள்ளார். அப்போது அவர் குழந்தையையும் தூக்கி சென்றார். பணம் எடுக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.

தன் குழந்தை கடத்தப்பட்டதை தெரிந்து கொண்ட சந்திரன், இது குறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சேதுமணி மாதவன், சூரக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் அழகுமுத்து, ஏட்டுக்கள் சீனி, ரமேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் குழந்தையை கடத்தி சென்றவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் குழந்தையை கடத்திய சத்யா, ரிக்சாட்சன் ஆகியோர் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தப்பி செல்வது தெரியவந்தது. உடனே உஷாரான போலீசார் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு சென்று குழந்தையுடன் சென்னைக்கு தப்ப முயன்ற சத்யா, ரிக்சாட்சன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் விவரம் வருமாறு:–

குழந்தையை கடத்திய சத்யாவின் உண்மையான பெயர் ராஜேஸ்வரி (வயது28) ஆகும். இவர் சென்னையை சேர்ந்தவர். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பையா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 2 குழந்தைகள் பிறந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜேஸ்வரி கணவரை பிரிந்தார்.

பின்னர் சென்னையை சேர்ந்த விக்டர் என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டார். அவரும் சிறிது காலத்தில் இறந்து விட சென்னை ராயபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது தாயாரின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. இதன் காரணமாக அங்கிருந்து வெளியேறிய ராஜேஸ்வரி ராயபுரத்தில் யோகநாயகி என்பவருடன் தங்கி வசித்து வேலை பார்த்து வந்துள்ளார்.

யோகநாயகிக்கும் மதுரையை சேர்ந்த சேகர் என்பவருக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் ராஜேசுவரிக்கும் சேகருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் ராஜேஸ்வரியிடம் அடிக்கடி பேசி மதுரைக்கு வந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி ராஜேஸ்வரி மதுரைக்கு வந்துள்ளார். இங்குதான் அவரின் வாழ்க்கை தடம் புரண்டது. சேகருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ராஜேஸ்வரி குடும்பம் நடத்தியுள்ளார். பின்னர் ராஜேஸ்வரியை மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்த லட்சுமியம்மாள் என்ற விபசார புரோக்கருடன் சேகர் அனுப்பி வைத்தார்.

விபசாரம் செய்து பணம் சம்பாதித்த ராஜேஸ்வரிக்கு மதுரையில் தங்கி இருக்க பிடிக்கவில்லை. ஈரோடுக்கு சென்ற அவர் அங்கு பிரபு என்பவருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் பிரபு தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்று எண்ணிய ராஜேஸ்வரி தான் கர்ப்பமாக இருப்பதாக பொய்யான தகவலை கூறியுள்ளார். இதையடுத்து பிரபு தனது தாயார் சம்மதத்துடன் ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஜூலை மாதம் ராஜேஸ்வரிக்கு பிரபு குடும்பத்தினர் வளைகாப்பு செய்து வைத்தனர். மேலும் குழந்தை பிறப்பு குறித்து நெருக்கடி கொடுத்துள்ளனர். ராஜேஸ்வரியும் வயிற்றை பெரிதாக காட்டி அவர்களை ஏமாற்றி வந்துள்ளார்.

மேலும் இந்த பிரச்சனையை இறந்த 2–வது கணவரின் தம்பியும், கள்ளக்காதலனுமான ரிக்சாட்சனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரும் மதுரைக்கு புறப்பட்டு வந்து எம்.எம்.சி. காலனியில் தங்கி உள்ளனர். பக்கத்து வீட்டிலிருந்த குழந்தையை கடத்திய அவர்கள் சென்னைக்கு தப்ப முயன்ற போது சிக்கினர்.Post a Comment

Protected by WP Anti Spam