செல்போனை பறித்த 2 பேர் கைது

Read Time:2 Minute, 32 Second

rita.gifரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் செல்போனை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் அடையாறு, சாஸ்திரி நகர் உட்பட பல இடங்களில் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன்களை பறித்துச் செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று அடையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகத்திற்கிடமான 2 வாலிபர்களை விசாரித்த போது அவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபடுபவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர் குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது27), மற்றொருவர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பதும் இவர்கள் ரோட்டில் நடந்து செல்லும் குறிப்பாக பெண்களிடம் அவர்கள் பேசிக்கொண்டு செல்லும்போது செல்போன்களை பறித்து செல்பவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து 18 செல்போன்களை போலீசார் மீட்டனர். மேலும், மோட்டார் சைக்கிளும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணை யில் இவர்கள் சென்னை நகர, மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல இடங்களிலும் எந்தெந்த ஊர்களுக்கு செல் கிறார்களோ அங்கெல்லாம் வழிபறியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் தலைமறைவான அவரது கூட்டாளி ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கள்ளநோட்டு தொழிற்சாலை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next post உலகின் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல் முதலிடத்தில் உள்ளார்.